லட்ச கணக்கில் வருமானம் தரும் தொழில்! சிறு முதலீட்டில்.. Environmental Friendly..
தான் கையே தாக்குதவி என்கிற பழமொழிக்கு ஏற்ப மாத வருமானத்தை காட்டிலும் சிறுதொழில் செய்வதே சிறப்பாகும். அதிலும் சிறு முதலீட்டில் லட்ச கணக்கில் வருமானம் தரும் தொழில்கள் பல உள்ளன. அதில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற தொழில்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது.
பேப்பர் பை (Paper Bag) தயாரிப்பு தொழில் தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தடைகளால் மிகுந்த தேவை பெற்ற ஒரு தொழிலாக மாறியுள்ளது. இது சிறிய முதலீட்டில் தொடங்கக்கூடிய மற்றும் நல்ல லாபம் ஈட்டக்கூடிய தொழிலாகும்.
சிறிய முதலீட்டுடன் துவங்கி அதிக லாபம் தரும் தொழில் Click Here
பேப்பர் பை தயாரிப்பு தொழில் தொடங்குவரற்கு முன் அதன் சந்தை மதிப்பை அறிவது முக்கியம் ஆகும். அருகில் உள்ள வணிக வர்த்தக ஸ்டோர்கள், உணவகங்கள், அசைவ உணவகங்கள், மற்றும் கடைகள் பகுதியில் பேப்பர் பைகளுக்கான தேவை மற்றும் போட்டியை ஆய்வு செய்யுங்கள்.
முதலீடு மற்றும் வசதிகள்
- பேப்பர் பை தயாரிப்பு தொழில் உற்பத்திக்கான இடம் குறைந்தபட்சம் 500-700 சதுர அடி இடம் போதுமானது.
- குறைந்தபட்சம் ₹5000 முதல் முதலீடு செய்யலாம், தொழிலின் அளவைப் பொறுத்து.
தேவையான பொருட்கள்
- காகிதம், பசை (Glue), அச்சிடும் பொருட்கள் ஆகியவை முதன்மை பொருட்கள் ஆகும்.
- பேப்பர் கட் செய்யும் இயந்திரம்.
- பேப்பர் பை உருவாக்கும் இயந்திரம்.
- அச்சிடும் மற்றும் லேமினேஷன் இயந்திரம் ஆகியவை தேவைபடுகிறது.
சராசரி லாபம்
- பேப்பர் பை தயாரிப்பு தொழிலில் சராசரி லாபம், ஒவ்வொரு பேப்பர் பைக்கும் ₹3 முதல் ₹10 வரை லாபம் கிடைக்கும்.
- தினசரி உற்பத்தியில் 1000 பைகள் தயாரித்தால், ₹3000 முதல் ₹10,000 வரை லாபம் ஈட்டலாம்.
உற்பத்தி மற்றும் விற்பனை
- வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப வடிவமைப்பு செய்யவும்.
- காகிதத்தை தேவையான அளவுக்கு வெட்டவும்.
- தகுந்த மடிப்பு மற்றும் ஒட்டுதல் செயல்முறை செய்யவும்.
- பைகளில் விளம்பர தகவல்களை அச்சிடவும்.
- தயாரிப்புகளை சரியாக மடித்து சந்தை மற்றும் ஸ்டோர்கள், உணவகங்கள், அசைவ உணவகங்கள், கடைகள் பகுதியில் நேரடியாக விற்பனை செய்யலாம்.
- ஆன்லைன் விற்பனை தளங்களில் (Amazon, Flipkart) பதிவு செய்தும் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்தும் விற்பனை செய்யலாம்.
MSME பதிவேடு மற்றும் GST பதிவு, Factory License போன்ற அனுமதிகள் பெற்று பேப்பர் பை தயாரிப்பு தொழிலை பெரிய அளவில் செய்ய முடியும் . இந்த பதிவேடுகள் மூலம் பேப்பர் பை தயாரிப்பு தொழில் தொடங்குவரற்காண முதலீட்டை கடனாக பெற்று கொள்ள முடியும்.
பேப்பர் பை அல்லாது பேப்பர் கப், பேப்பர் பிளேட் போன்ற பொருள்களும் உற்பத்தி செய்யலாம். சுற்றுச்சூழல் நலனை பாதுகாத்து, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பேப்பர் பைகளை வழங்குவதால், கூடுதல் வாடிக்கையாளர்களையும் ஆதரவையும் பெற முடியும்.
.jpg)




